தேசபந்து தென்னகோனை இடமாற்றவும்! சட்டமா அதிபர் பணிப்புரை
சிரேஷ்ட பிரதி காவல் மா அதிபர் தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை வழங்கியுள்ளார்.
மே 9ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் தேவையற்ற தலையீடுகளை தவிர்ப்பதற்காக சட்டமா அதிபர் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
அதற்கமைய, சட்டமா அதிபர், காவல்மா அதிபருக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
தேசபந்து தென்னகோன் சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுடன் காணப்பட்டார், அவர் கொழும்பில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களுக்கு தலைமை தாங்கினார் எனவும் கூறப்படுகிறது.
அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடல் தாக்குதல் தொடர்பில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான தேசபந்து பிரதிப் காவல் மா அதிபர் தென்னகோனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.