சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் இலங்கைக்கு விஜயம்!
Sri Lanka
Sri Lanka Final War
World
By Shalini Balachandran
சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னஸ் காலமர்ட் (Agnes Callamard) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அவரது விஜயமானது நேற்றைய தினம்(16) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு , சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னஸ் காலமர்ட்டின் தெற்காசியாவிற்கான முதல் விஜயம் இதுவாகும்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
ஆக்னஸ் காலமர்ட் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் 18 ஆம் திகதி இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும் அவர் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்