எல்லையில் நிறுத்தப்பட்ட ஈரானிய கப்பல்! 27 பேர் கொழும்பு வைத்தியசாலைக்கு
Colombo
Sri Lanka
Iran
By Jaso
இலங்கை கடல் எல்லைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஈரானிய கப்பலில் பணியாற்றிய 27 பேர் திடீரென சுகவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலி துறைமுகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஈரானிய மசகு எண்ணெய்க் கப்பல்களில் இருந்தவர்களே இந்த நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, வெளிவிவகார அமைச்சின் தலையீட்டுடன் அவர்கள் நேற்று(24) நண்பகல் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மேலதிக சிகிச்சை
இலங்கை கடற்படைக்குச் சொந்தமான இரண்டு டோரா ரகப் படகுகள் மூலம் குறித்த பணியாளர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டதாக காலி மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படும் வரை அவர்கள் காலி துறைமுகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்