இஸ்ரேலுக்கான அனைத்து ஏர் இந்தியா விமானங்களும் ரத்து : அதிகரித்துள்ள பதற்றம்
இஸ்ரேலின் (Israel) தலைநகர் டெல் அவிவுக்கான அனைத்து விமானங்களையும் ஏர் இந்தியா (Air India) இரத்து செய்துள்ளது.
மத்திய கிழக்கில் இஸ்ரேல் - ஹமாஸ் மற்றும் ஈரான் (Iran) ஆகியவற்றால் உருவாகியுள்ள பதற்ற நிலைமைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் படி, இது தொடர்பான அறிவிப்பை ஏர் இந்தியா நிறுவனம் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைதள கணக்கில் வெளியிட்டுள்ளது.
இஸ்மாயில் படுகொலை
அண்மையில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் வலு பெற்றுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் மீதான பதில் தாக்குதலை ஈரான் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
விமான சேவை ரத்து
இதேவேளை, ஈரானின் பதில் தாக்குதல் உறுதியாகியுள்ள நிலையில், குறித்த தாக்குதலுக்கு முகங்கொடுக்க இஸ்ரேலும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக இஸ்ரேலுக்கான விமான சேவைகளை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |