எம்.பி.க்களின் ஓய்வூதியம் மீதான விவாதம் இன்று
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (17) நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது.
இன்று முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இதற்கான விவாதம் நடைபெறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாதத்தின் இரண்டாவது நாடாளுமன்ற வாரம் இன்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
தேர்தல்கள் தொடர்பான சட்டங்கள்
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், முற்பகல் 11.30 மணி வரை நாடாளுமன்ற அலுவல்கள் மற்றும் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 11.30 முதல் மாலை 5.00 வரை நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு நடைபெறவுள்ளது.
மாலை 05 மணியளவில் தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்து, நாடாளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான நாடாளுமன்ற விசேட குழுவினை நியமிப்பதற்கான தீர்மானம் ஆகியன முன்மொழியப்படவுள்ளன.
மாலை 05.00 முதல் மாலை 05.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 2 நாட்கள் முன்