ஏர்பஸ் கொள்முதல் மோசடி! ஆப்பிள் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட விசேட மின்னஞ்சல்
ஏர்பஸ் கொள்முதல் மோசடி சம்பவத்தின் விசாரணைகள் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம், ஆப்பிள் நிறுவனத்திற்கு விசேட மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது.
இந்த மோசடி சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான, சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி கபில சந்திரசேனவின்(காலஞ்சென்ற) கைபேசியிலிருந்து தரவுகளைப் பெறுவதற்கான நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சி.ஐ.டி குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்த விடயத்தை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (09) கோட்டை நீதவான் நீதிமன்றிற்கு சுட்டிக்காட்டியுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
இந்தச் சம்பவம் தொடர்பான நீதித்துறை நடுவர் விசாரணை இன்று (09) மீண்டும் கூடியபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் மேலும் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த சந்தேக நபரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் மரண விசாரணை அதிகாரியின் அறிக்கை ஆகியவை இன்னும் பெறப்படவில்லை என்றும் அரசு தரப்பு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
அதன்படி, அந்த அறிக்கைகளை உடனடியாக நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு மரண விசாரணை அதிகாரிக்கும் அரசுப் பகுப்பாய்வாளருக்கும் நீதிமன்றம் ஒரு நினைவூட்டலை விடுத்தது.
அதன்படி, இந்த வழக்கை ஒக்டோபர் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |