கோட்டாபயவின் பாதுகாவலரே அலி சப்ரி - சாணக்கியன் குற்றச்சாட்டு
அலி சப்ரி என்பவர் நாட்டினுடைய வெளிவிவகார அமைச்சராக இருப்பதனை விட கோட்டாபய ராஜபக்சவை பாதுகாப்பதற்காகவே அவர் அவ்விடத்தில் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம்சாட்டியுள்ளார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்து தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படும் போது, சிறிலங்கா சுதந்திர கட்சியில் சாணக்கியன் இருந்ததாகவும், தற்போது மறைமுகமாக நாய் குரைப்பது போன்ற செயற்பாட்டில் ஈடுப்படுவதாகவும் அலி சப்ரி கடந்த நாடாளுமன்ற அமர்வில் குற்றம் சாட்டியிருந்தார்.
பொறுப்புக்கூறல்

இது தொடர்பில் தொகுப்பாளர் எழுப்பிய கேள்விக்கு சாணக்கியன் பின்வருமாறு பதிலளித்திருந்தார்,
“பொதுவாகவே எனக்கெதிராக விமர்சனங்களை முன்வைப்பதற்கு வேறு வழிமுறைகள் எதுவுமே இல்லை.
அத்துடன், என்னுடைய கடமை பொறுப்பு மக்களுக்கு சரியானவற்றை எடுத்துச் சொல்லுவதே ஆகும்.
பொறுப்புக்கூறல் விடயத்திலே பொறுப்புக்கூற வேண்டியவர் கோட்டாபய ராஜபக்ச தான்.
மேலும், இப்பொறுப்புக்கூறல் விடயத்திலே உண்மையை அறிந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் அது முழு இலங்கைக்கும் நல்லதொரு எதிர்காலமாக அமையும்.
பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் ஒரு நியாயம் கிடைக்க கூடியதாக இருக்கும்
அதனில் பாதிக்கப்பட கூடியவர்கள் ராஜபக்ச குடும்பத்தினரே” என்றார்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 5 மணி நேரம் முன்