சவுதி இளவரசர் மற்றும் சிறிலங்கா அமைச்சரிடையே முக்கிய சந்திப்பு!
சிறிலங்காவிற்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பெரும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபிய இளவரசருடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் முதலீட்டு வாய்ப்புகள் உள்ளிட்ட சகல விடயங்களிலும் சவுதி அரேபியா சிறிலங்கா மீது அக்கறை கொண்டுள்ளமையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சவுதி இளவரசர் அலி சப்ரி சந்திப்பு
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சவுதி அரேபியா சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் அஹமட்டை நேற்றைய தினம் சந்தித்துள்ளார் என அந்நாட்டு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது இலங்கை மற்றும் சவுதி அரேபியாவிற்கு இடையேயான பொருளாதார உறவுகள் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

