ஜப்பானுக்கான மொத்த விமானங்களும் ரத்து! சீனாவின் முடிவால் பரபரப்பு
சீனா மற்றும் ஜப்பான் இடையிலான விமானப் போக்குவரத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பெப்ரவரி மாதத்திற்காக திட்டமிடப்பட்டிருந்த சீனா–ஜப்பான் இடையிலான 49 விமான வழித்தடங்களில் அனைத்து திட்டமிட்ட விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமான நிறுவனங்கள்
Flight Master என்ற விமான தகவல் தளத்தின் தரவுகளின்படி, ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரியில் விமான ரத்துகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

Image Credit: Guangdong News
ஜனவரியில் சீன மைய நிலப்பகுதியிலிருந்து ஜப்பானுக்கு செல்லும் விமானங்களின் ரத்து 47.2 வீதமாக இருந்தது. இது டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 7.8 வீத அதிகரிப்பாகும்.
இந்நிலையில், சீனாவின் மூன்று முக்கிய விமான நிறுவனங்களான Air China, China Eastern Airlines மற்றும் China Southern Airlines ஆகியவை ஜப்பான் தொடர்புடைய விமான பயணங்களுக்கான சிறப்பு பற்றுச்சீட்டு மாற்றம் மற்றும் பணம் திருப்பித் தரும் கொள்கைகளை அறிவித்துள்ளன.
பயண எச்சரிக்கை
அந்நாட்டு மக்களை இலக்கு வைத்து வன்முறைகள் இடம்பெறலாம் என சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட பயண எச்சரிக்கையைத் தொடர்ந்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த கொள்கையின் படி, ஜனவரி 26 மதியம் 12 மணிக்கு முன்னர் வாங்கப்பட்ட அல்லது மீண்டும் வெளியிடப்பட்ட தகுதியான பற்றுச்சீட்டுகளை கொண்ட பயணிகள், கட்டண வேறுபாடு இருந்தால் ஒரு முறை இலவசமாக பயண திகதியை மாற்றவோ அல்லது பயன்படுத்தப்படாத பயண பகுதிகளுக்கு கட்டணமின்றி பணத்தை திருப்பிப் பெறவோ முடியும்.
இந்த சலுகைகள் மார்ச் 29 முதல் ஒக்டோபர் 24 வரை திட்டமிடப்பட்டுள்ள ஜப்பான் தொடர்புடைய விமானங்களுக்கு பொருந்தும். இதில் டோக்கியோ, ஒசாகா, நாகோயா, ஃபுகூஒக்கா, சப்போரோ மற்றும் ஓகினாவா போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களும் அடங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |