ஈரானின் அடுத்த இலக்கு! துபாய் - அபுதாபி நகரங்களுக்கு எச்சரிக்கை
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிக்கும் நிலையில், ஈரான் இராணுவம் (IRGC) ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள (UAE) உள்ள முக்கிய துறைமுக பகுதிகள் மற்றும் அமெரிக்க தொடர்புடைய இடங்களை “நியாயமான இலக்குகள்” என அறிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, துபாயின் ஜெபெல் அலி துறைமுகம், அபு தாபியின் காலிபா துறைமுகம் மற்றும் புஜைரா துறைமுகம் ஆகியவற்றை ஈரான் இலக்குகலாக கருதப்படுகின்றன.
ஈரான் எச்சரிக்கை
ஈரான் எச்சரிக்கை, அமெரிக்கா மேற்கொண்ட இராணுவ தாக்குதல்கள் காரணமாக எச்சரிக்கை வெளிவந்தது என கூறப்படுகிறது.

இந்த தாக்குதல்கள் ஈரானின் முக்கிய இடங்களை பாதித்ததாக IRGC வாதிடுகிறது.
எனினும் தாக்குதல் இடம்பெற்றால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பாதிப்புகள் மற்றும் விமான போக்குவரத்து தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |