திடீரென நடுவானில் விமானத்தை நெருங்கிய பறக்கும் தட்டு - விமானியின் பகீர் தகவல்
லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு அருகில் தரையிறங்கத் தயாராகிக் கொண்டிருந்த போது விமானி ஒருவர் மர்மமான தட்டு வடிவப் பொருள் ஒன்றைக் கண்டதாகக் கூறியதாக சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ளது.
அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில்அது ஒரு நவீன டிரோனாக இருக்க கூடும். ஆனால்இ அதன் சரியான அடையாளமோ அல்லது எந்த பகுதியில் இருந்து வந்தது என்றோ தெரியவில்லை என கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் கேட்விக் விமான நிலையத்தில் எயார்பஸ் ஏ319 என்ற பயணிகள் விமானம் தரையிறங்க வேண்டி இருந்தது.
நவீன டிரோனாக இருக்க கூடும்
இதற்காக கேட்விக் பகுதிக்கு தெற்கே 7 மைல்கள் தொலைவில், சசெக்ஸ் கவுன்டி பகுதியில் ஹேங்கிராஸ் அருகே நடுவானில் பறந்து வந்து கொண்டிருந்தது. விமானம் தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும்போது, அந்த சம்பவம் நடந்தது.

திடீரென மர்ம பொருள் ஒன்று மெதுவாக மேலே எழும்பி வந்தது. விமானிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், விமானத்தின் வலது இறக்கை பகுதியருகே வட்ட வடிவிலான அந்த பறக்கும் தட்டு 100 முதல் 300 அடி இடைவெளியில் விமானத்திற்கு மிக நெருங்கிய தொலைவில் வந்துள்ளது.
தூரத்திலேயே விமானி அதனை கவனித்து விட்டார். வேறு திசைக்கு செல்வதற்கு ஏற்ப விமானமும், முன்பே திசை திருப்பப்பட்டு விட்டது. இதனால், பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தனித்துவமான தட்டு
விமானி அந்த விண்கலத்தை, அதன் வெளி விளிம்பில் அடர் நிறக் குறிகளைக் கொண்ட ஒரு தனித்துவமான தட்டு என்று விபரித்துள்ளார்.

எனினும், விமானம் தரையிறங்கியதும் இதுபற்றி உயரதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்து உள்ளார். அது ஒரு வட்ட தட்டு அல்லது பறக்கும் தட்டு அல்லது டிரோனாக இருக்க கூடும் என அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
அது, விமானத்திற்கு எதிர் திசையில் மிக நெருக்கத்தில், விமானத்தின் மட்டத்திற்கு இணையாக அதே மட்டத்தில் வந்தது. வலது இறக்கை பகுதியில் கடந்து சென்றது என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |