அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு ஈரான் ஆர்வமில்லை...! நீடிக்கும் கருத்து வேறுபாடு
அமெரிக்காவின் வாக்குறுதிகளை நம்ப முடியாது என்பதால் அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்றது என ஈரான் கருதுவதாக முன்னாள் அமெரிக்க இராஜதந்திர அதிகாரி ஆலன் ஐயர் தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஈரான் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை குழுவில் இருந்த அவர், தற்போது முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை ஓமான்–ஈரான் இடையே ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
ஓமான் மற்றும் ஈரான் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தும் திறன் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அணுசக்தி பேச்சுவார்த்தை
அத்தோடு, ஹோர்முஸ் நீரிணை மீது முழு கட்டுப்பாடும் கட்டண வசூலும் வேண்டும் என்ற ஈரானின் நிலைப்பாட்டுக்கும், கட்டணம் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற ஓமானின் நிலைப்பாட்டுக்கும் இடையே இன்னும் பெரிய கருத்து வேறுபாடு நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா–ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை விரைவில் முன்னேறும் வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் ஆலன் ஐயர் மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |