கிளிநொச்சியில் கோர விபத்து : பெண் பரிதாபமாக உயிரிழப்பு!
கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இயக்கச்சி சந்தியில் இருந்து கோவில் வயல் செல்லும் பிரதான வீதியில் இன்று (03) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் ஹயஸ் வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
வீதியில் நின்று கொண்டிருந்த குறித்த பெண் மீது, அதே திசையில் பின்னால் சென்று கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் மோதியதிலேயே விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் படுகாயங்களுக்குள்ளான பெண்ணை உடனடியாக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

30 வருடங்களுக்கு மேலாக பல்வேறு சமூக மட்ட அமைப்புக்களில் பணியாற்றிய கிளிநொச்சி பளையை சேர்ந்த 49வயதுடைய சந்திரன் சசிகலா என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் விபத்துச் சம்பவம் தொடர்பில் பளை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்கா கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |