அதிகாலையில் பேருந்துகள் மோதி கோர விபத்து
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Accident
By Thulsi
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து கேகாலை - கரடுபன பகுதியில் இன்று (3.06.2026) காலை 6:15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
ரம்புக்கனையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இ.போ.ச. பேருந்தும், திகனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்தவர்கள் கேகாலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கேகாலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்