ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் இருவரை மட்டுமே இலக்கு வைத்து விசாரணை! முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு

Champika Ranawaka Sri Lankan Peoples Easter Attack Sri Lanka
By Dhilak Aug 03, 2026 01:33 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒரு சிலரை மட்டும் இலக்கு வைக்காமல் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாட்டு மக்களுக்குப் பெரும் வேதனை நிகழ்கிறது. மிகத் தெளிவான எச்சரிக்கைகளும் முன்னறிவிப்புகளும் கிடைத்திருந்த போதிலும், அத்தாக்குதலைத் தடுப்பதற்குப் காவல்துறையினரோ அல்லது ஏனைய பொறுப்பு வாய்ந்த தரப்பினரோ உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

15 கோடி ரூபா சொத்துகள் சேதம்! மஹர சிறையில் கைதிகள் செய்துள்ள அட்டூழியம்!

15 கோடி ரூபா சொத்துகள் சேதம்! மஹர சிறையில் கைதிகள் செய்துள்ள அட்டூழியம்!

பூரண விசாரணை

இது தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகளில் பூஜித ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் மட்டுமன்றி, பல அரச அதிகாரிகளும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் இருவரை மட்டுமே இலக்கு வைத்து விசாரணை! முன்னாள் எம்.பி குற்றச்சாட்டு | Ex Mp Demands Full Investigation Easter Attack

அந்தவகையில், இருவரை மட்டும் இலக்கு வைத்துத் தண்டிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

குறிப்பாக, 2017 ஆம் ஆண்டில் தாய்நாட்டின் மீது பற்றுக்கொண்ட மௌலவிகள் சிலர் சட்டமா அதிபர் திணைக்களத்துக்குச் சென்று இது குறித்து முறைப்பாடு செய்திருந்ததாக அக்காலப்பகுதியில் நீதி அமைச்சராக இருந்தவர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

இதன் மூலம் சட்டமா அதிபர் திணைக்களமும் தனது பொறுப்பைச் சரியாக நிறைவேற்றவில்லை என்பது புலனாகின்றது.

எனவே, அக்காலத்தில் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் உட்பட அனைவரையும் உள்ளடக்கிப் பூரண விசாரணை செய்யப்பட வேண்டும். அதை விடுத்து ஒரு சிலரை மட்டும் பலிகடா ஆக்கிவிட்டுப் பிரச்சினையைத் தீர்த்துவிட்டதாகக் காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்றார்.

திருகோணமலையில் இன்றுமாலை கோரவிபத்து : இரண்டு தமிழ் இளைஞர்கள் உயிரிழப்பு

திருகோணமலையில் இன்றுமாலை கோரவிபத்து : இரண்டு தமிழ் இளைஞர்கள் உயிரிழப்பு

அதிகாரிகள் மீதான மரணதண்டனை தீர்ப்பால் முன்னாள் ஜனாதிபதிக்கு காய்ச்சல் : ஸ்ரீநேசன் எம்.பி கிண்டல்

அதிகாரிகள் மீதான மரணதண்டனை தீர்ப்பால் முன்னாள் ஜனாதிபதிக்கு காய்ச்சல் : ஸ்ரீநேசன் எம்.பி கிண்டல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025