மட்டக்களப்பில் தியாக தீபம் திலீபனின் ஊர்திக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி!
தமிழர் தேசத்தின் விடுதலைக்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் நடைபெற்று வருகின்றன.
செப்டெம்பர் 15 ஆம் திகதி யாழ். நல்லூரிலே தியாக தீபம் உண்ணா நோன்பை ஆரம்பித்த தினம் என்பதால் செப்டெம்பர் 15 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பொத்துவிலிலிருந்து ஆரம்பமாகிய இந்த ஊர்த்தி பவனியானது மக்களின் அஞ்சலிக்காக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி ஊடாக நல்லூரைச் சென்றடைவது வழமை.
மலர் தூவி அஞ்சலி
அந்த வகையில் பொத்துவிலில் இருந்து ஆரம்பமாகிய ஊர்திப் பவனி இன்று (17.09.2023) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்துள்ள நிலையில் களுதாவளை, களுவாஞ்சிகுடி, மாங்காடு போன்ற பல ககுதிகளிலும் திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்திக்கு மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தநிலையில், 26ஆம் திகதி திலீபன் உயிர்த் தியாகம் செய்த நல்லூரிலே மிகப் பிரமண்டமான இறுதி வணக்க நிகழ்வு நடைபெறும் என செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |