மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை...! ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட விசாரணை
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை மற்றும் கலவரம் தொடர்பாகச் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) விசாரணையை ஆரம்பித்துள்ளது.
குறித்த சிறப்பு விசாரணையானது நேற்றிலிருந்து (03-08-2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழுவொன்று நேற்று முற்பகல் மஹர சிறைச்சால பகுதிக்கு நேரில் சென்று விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
கோடிக்கணக்கான ரூபாய்
இதற்கு மேலதிகமாக, சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் (International Human Rights Organization) பிரதிநிதிகள் குழுவொன்றும் நேற்று மஹர சிறைச்சாலைக்கு நேரில் சென்று அங்குள்ள கள நிலவரங்களை ஆராய்ந்துள்ளது.
சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை குறித்து சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுபாஷன சுபவிக்ரம கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், இச்சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற பலத்த சந்தேகம் எழுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், “கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.
விரிவான விசாரணைகள்
சிறைச்சாலை வளாகம் முழுவதும் முற்றாக நாசமாக்கப்பட்டுள்ளதால், அங்கு மனிதர்கள் தங்கியிருக்க முடியாத சூழலே நிலவுகிறது.
இந்த அழிவு கைதிகளின் தேவைகளுக்காக நடந்ததா அல்லது வேறு யாராவது தங்களது தேவைகளுக்காக இதைச் செய்தார்களா என்பதை நாங்கள் கண்டறிய வேண்டும்.

ஒரு சில அறைகளுக்குள் இருக்கும் கைதிகளால் மட்டும் இவ்வளவு பெரிய அழிவை ஏற்படுத்த முடியாது.
இது யாரோ ஒருவரின் திட்டமிட்ட பின்னணியில் நடந்த சம்பவம் என்றே நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறைச்சாலைச் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய சேதம் மற்றும் கலவரத்தின் பின்னணி குறித்த விரிவான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |