வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூரானின் வடக்கு வாசல் வளைவு - மக்களுக்கான அறிவித்தல்
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருமையை மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் வடக்கு திசையில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார தோரண வாசலான "நல்லூரான் வடக்கு வாசல் வளைவு" திறந்து வைக்கப்படவுள்ளது
நல்லூரான் வடக்கு வாசல் வளைவு, எதிர்வரும் 6 ஆம் திகதி தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00மணிக்கு காண்பிய விரிப்புக் காணவுள்ளது.
நல்லூரான் வடக்கு வாசல் வளைவு
இதனை முன்னிட்டு, அன்று காலை 10.30 மணிக்கு சட்டநாதர் சிவன் கோவிலிருந்து சமய அனுஷ்டானங்களுடன், நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டை திருக்கை காளை மாட்டு வண்டில் மங்கள வாத்தியங்கள் முழங்க வளைவை நோக்கிப் புறப்படும்.

அதனைத் தொடர்ந்து, தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு, நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்துடன் வரும் காளை மாட்டு வண்டில் முதன்முறையாக புதிய வளைவின் ஊடாகச் செல்லும்.
அந்த மங்கள நிகழ்வின் மூலம் 'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு' காண்பிய விரிப்புக் காணும்.
யாழ்ப்பாணத்தின் கந்தபுராண மரபையும் கலாசாரப் பாரம்பரியத்தையும் எடுத்தியம்பும் வகையில் இவ்வளைவு வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |