நிலை தடுமாறும் ட்ரம்ப்! மீண்டும் ஈரானுடன் பேச்சுவார்த்தை
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இன்று திங்கட்கிழமை(03) மீண்டும் தொடங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான பெரும் தாக்குதலை ரத்து செய்ததாகக் கூறியதைத் தொடர்ந்து அவரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “தாக்குதல் உருவாவதை அவர்கள் கண்டதால், அதன் தீவிரத்தை அவர்கள் அறிந்திருந்தனர். இப்போது நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை வடிவில் பேசிக்கொண்டிருக்கிறோம்.அது நாளை மதியம் தொடங்குகிறது, என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்று கூறியுள்ளார்.
மறுத்துள்ள ஈரான்
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் போன்ற நட்பு நாடுகளும் ஈரானும் திட்டமிடப்பட்ட தாக்குதலை ரத்து செய்யுமாறு தன்னிடம் கேட்டுக்கொண்டதாக ட்ரம்ப் முன்னதாக தெரிவித்திருந்தார்.

எனினும், திட்டமிடப்பட்ட தாக்குதல்களை நிறுத்துமாறு ட்ரம்பிடம் தாங்கள் கோரிக்கை விடுக்கவில்லை என ஈரானிய அரசு ஊடகங்கள் மறுத்துள்ளன.
ஈரானின் அரை-அரசு செய்தி நிறுவனம் “முட்டாள் ட்ரம்புக்கு சக்தி தீர்ந்துவிட்டது” என விமர்சித்துப் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |