அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அமெரிக்கா கரிசனை
சிறைப்படுத்தப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அனைத்து உலகநாடுகளும் முன்வரவேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி ஜே.பிளிங்கென் (Antony J. Blinken) கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசியல்கைதிகள் தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“அரசியல் கைதிகள் எங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தாலும், உலகநாடுகள் அனைத்தும் அதற்கு எதிரான நிலைப்பாட்டை வெளியிடவேண்டியதும், அவர்களின் விடுதலைக்காக ஒன்றிணைந்து செயலாற்றுவதும் மிகவும் அவசியமாகும்.
அரசியல் கைதிகள் சில சந்தர்ப்பங்களில் அவர்களது இனம், மதம், மொழி, அவர்கள் யாரை நேசிக்கின்றார்கள் என்பன உள்ளடங்கலாக அவர்களது அடையாளத்திற்காக இலக்குவைக்கப்படுகின்றார்கள்.
குறிப்பாக அரசியல்கைதிகளில் சிறுபான்மையினரே பெருமளவிற்கு உள்ளடங்குகின்றார்கள்.
சிறைவைக்கப்படும் கைதிகள், சித்திரவதைகளுக்கும் மனிதாபிமானமற்ற முறையிலான நடத்தைகளுக்கும் உள்ளாக்கப்படும் அதேவேளை, அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளும் மறுக்கப்படுவதாக” தெரிவித்துள்ளார்.


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 5 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்