அதிபர் ரணிலின் நெற்றிக்கு நேரே பொன்சேகா தெரிவித்த விடயம்

SJB Ranil Wickremesinghe Sarath Fonseka Sri Lanka All Party Government
By Jaso Aug 05, 2022 10:40 PM GMT
Report

சர்வகட்சி அரசாங்கம் பயனுள்ள விடயம் அல்ல 

சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குவது பயனுள்ள விடயம் அல்ல என அதிபர் ரணிலுடனான கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள பிரச்சினைக்கு சர்வகட்சி அரசாங்கத்தை தீர்வாக பார்க்கவில்லை எனவும் பொன்சேகா தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மக்களின் பிரதான கோரிக்கையாக ஊழலை ஒழிக்க வேண்டுமென தெரிவித்த பொன்சேகா, அதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும், ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதிபர் ரணிலின் நெற்றிக்கு நேரே பொன்சேகா தெரிவித்த விடயம் | All Party Government Is Not A Useful Fonseka

பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகள் 

தற்போது நாடும் மக்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகள் காணப்பட வேண்டியது அவசியமானது எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளது.

இதன்போது சர்வகட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா டுவிட்டர் பதிவொன்றினையிட்டு தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016