ரணிலின் அழைப்புக்கு ஆதரவளிக்கிறதா கூட்டமைப்பு! சம்பந்தன் வெளியிட்டுள்ள தகவல்
TNA
Rajavarothiam Sampanthan
Ranil Wickremesinghe
Sri Lanka All Party Government
By Kanna
சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி ரீதியான முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான ஒத்துழைப்பைக் கோரி அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் அனைத்து கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
அதன்படி சர்வகட்சி அரசாங்கத்தை ஆதரிக்கவிருப்பதாக இரா.சம்பந்தன் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
