சிறிலங்காவில் தொடரும் நெருக்கடி - நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்..!
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Economy of Sri Lanka
By Kiruththikan
50 விசேட வைத்தியர்கள், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசேட வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அவசர விபத்துப் பிரிவு விசேட வைத்தியர்கள் 20 பேரும், மயக்க மருந்துவ நிபுணர்கள் 30 பேரும், இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக, அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், விசேட வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, விசேட வைத்தியர்களைப் பயிற்றுவிக்கும் பணிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
