இராட்சத பச்சை நிற அரோரா நெருப்பால் சூழப்பட்ட பூமி! சூரியனில் ஏற்பட்டுள்ள வித்தியாசம் - விஞ்ஞானிகள் தகவல்
பூமியின் ஒரு பெரும் பகுதி பச்சை நிற தீப்பிழம்பால் சூழப்பட்டது போன்ற ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்டது. சூரியனின் வித்தியாசமான நடத்தையினால் இந்த அரோரா ஒலிகள் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக, சூரியன் சற்றே வித்தியாசமாக நடந்துகொள்வதை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
விண்வெளியில் அயனைஸ்ட் துகள்களின் தீவிரம் அதிகமாக உள்ளது என்றும், வழக்கத்தை விட அதிகளவில் இந்த துகள்கள் வெளியேற்றுகிறது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இது பூமியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய இராட்சத அரோரா நிகழ்வை உருவாகியுள்ளது. சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு வெடிப்புகள் பூமியின் காந்தப்புலங்களைத் தாக்கும் போது இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் இதை சதர்ன் லைட் மற்றும் நார்த்தன் லைட் என்று அழைக்கின்றனர். பனிக்காலத்தில் இந்த அரோராஸ் விளக்கு வானத்தில் தோன்றும்.
நாசாவின் கூற்றுப்படி, சூரியன் தொடர்ந்து சூரியக் காற்றை உருவாக்குகிறது, இது சூரியக் குடும்பத்தில் பாயும் சார்ஜ் செய்யப்பட்ட துகள்களால் ஆனது.
சூரியக் காற்று, பூமியின் காந்தப்புலத்திற்குள் வரும்போது, காந்த மறு இணைப்பை ஏற்படுத்துகிறது. இது ஒரு வெடிக்கும் செயல்முறையானது.
விண்வெளியில் இருந்து சார்ஜ் செய்யப்பட்ட துகள்களை வளிமண்டலத்தில் துரிதப்படுத்த அனுமதிக்கிறது.
இதனால், ஒளிரும் அரோரா விளக்குகள் பூமியின் வானத்தில் உருவாகிறது.