அசைவ உணவகத்திற்கு எதிராக யாழ். நல்லூரில் வெடித்த போராட்டம்
புதிய இணைப்பு
யாழ் நல்லூர் ஆலய வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்திற்கு எதிராக நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.
மாலை 4.30 மணியளவில் ஆரம்பமான போராட்டத்தில் சைவ சமயம் சாரந்த அமைப்புக்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
யாழ் (Jaffna) நல்லூர் ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டம் இன்று (20) மாலை 4.30 மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது.
நல்லூரானது சைவ சமயத்தின் புனிதத் தலமாக கருதப்படுகின்ற நிலையில், தலத்துக்கு அருகிலே அசைவ உணவகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
போராட்டம்
இதனை எதிர்த்தே மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
எனவே, அனைத்து நல்லூர் கந்தன் பக்தர்களும் ஒன்றுகூடி, இந்த அசைவ உணவகத்துக்கு எதிரான திடமான எதிர்ப்பை அமைதியான முறையில் வெளிப்படுத்த வேண்டுகிறோம் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


