அமெரிக்காவில் இருந்து வருகிறது டொலர்கள்!! வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
United States of America
Sri Lankan political crisis
Julie Chung
By Kanna
அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர்கள் சபை இலங்கைக்கு புதிதாக 120 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அனுமதிவழங்கியுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காகவும் ஆதரவாகவும் 120 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர்கள் சபை அனுமதி வழங்கியுள்ளது.
அமெரிக்க தூதுவரின் அறிவிப்பு
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இதனை இன்று அறிவித்துள்ளார்.
70 ஆண்டுகளாக, இலங்கையின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும் இலங்கை மக்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அமெரிக்கா வெளிநாட்டு உதவிகள், கடன்கள் மற்றும் வர்த்தக வாய்ப்புகளை வழங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

