ஏர் இந்தியா வெளியிட்ட விசேட அறிவிப்பு
ஏர் இந்தியா, ஜூன் 12-ஆம் திகதி நிகழ்ந்த AI171 விமான விபத்தையடுத்து மேற்கொண்ட "பாதுகாப்பு இடைவேளை" காரணமாக இடைநிறுத்திய சர்வதேச விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி, ஓகஸ்ட் 1 முதல் தனது சர்வதேச விமானங்களை பகுதியளவு மீண்டும் தொடங்குவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
பயணிகளுக்கு சலுகை
பின்னர் ஒக்டோபர் 1 முதல் அதன் முழுமையான சேவைகள் மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா விமானங்களின் பாதுகாப்பு பரிசோதனை மற்றும் சில வான்வழிப் பாதைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் நடவடிக்கைகளுக்குப் பிறகு, தற்போது கட்டுப்பாடுகளுடன் மீள ஆரம்பிக்கிறது.
இந்த நிலையில், ஏர் இந்தியா பாதிக்கப்பட்ட பயணிகளை நேரடியாக தொடர்புகொண்டு மாற்று விமானங்கள் அல்லது பணம் திருப்பிச் செலுத்தும் விருப்பங்களை அளித்துள்ளது.
வாடிக்கையாளர் சேவை
அத்துடன், உங்கள் பயண திட்டங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் ஏர் இந்தியா வாடிக்கையாளர் சேவையை அணுகுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த இடைக்கால கட்டத்திலும், ஏர் இந்தியா 525-க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்களை வாரந்தோறும் இயக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஓகஸ்ட் 1 முதல் மீண்டும் இயக்கத்தில் வர உள்ள சேவைகள்:
- டெல்லி - லண்டன் (ஹீத்ரோ): 24 வாராந்திர விமானங்கள் – ஜூலை 16 முதல் முழுமையாக இயங்கும்
- டெல்லி - சூரிச்: வாரத்தில் 4 → 5 விமானங்கள் ஆக ஓகஸ்ட் 1 முதல் அதிகரிப்பு
- டெல்லி - டோக்கியோ (ஹனெடா): ஓகஸ்ட் முதல் முழு சேவையும் மீளத் தொடக்கம்
- டெல்லி - சியோல் (இன்சியன்): செப்டம்பர் மாதத்திற்குள் முழு சேவையும் மீளத் தொடக்கம்
- டெல்லி - அம்ஸ்டர்டாம்: ஓகஸ்ட் 1 முதல் வாரம் முழுவதும் 7 விமானங்கள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

