அமெரிக்காவின் ஆதரவு கிடைக்கும்..! சஜித்திடம் உறுதியளித்த அமெரிக்க தூதுவர்
ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டு மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் ஒரு நாட்டுக்கு அமெரிக்காவின் ஆதரவு கிடைக்கும் என அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவை இன்று அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்தித்தார்.
இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பிலேயே அமெரிக்க தூதுவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
நெருக்கடி நிலை தொடர்பில் விசேட கவனம்
இரு தரப்பினருக்கும் முக்கியமான பல விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியதுடன் நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் இலங்கை மக்களின் அவசர மற்றும் நீண்ட காலத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கையின் அனைத்துத் துறைகளும் எவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பதற்கான கருத்துக்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக அமெரிக்க தூதுவர் தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Met with @sajithpremadasa today to discuss the current economic crisis and political situation, as well as to exchange ideas on how all sectors of Sri Lanka can work together to address both the urgent & longer-term needs of the Sri Lankan people. pic.twitter.com/2MHbjNHM8Q
— Ambassador Julie Chung (@USAmbSL) August 19, 2022

