இலங்கைக்கு அமெரிக்காவின் உதவி கிடைக்கும் விதம்..! வெளியான தகவல்
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை வெற்றிகரமாக எட்டப்பட்டால், அந் நிதியத்தின் மூலம் இலங்கைக்கு அமெரிக்க அரசு ஆதரவளிக்கும் என இலங்கைக்கான தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள இலங்கை-அமெரிக்க வர்த்தக சபையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
180,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஏற்றுமதி
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதியுதவி, விவசாயிகளுக்கான உரம் மற்றும் விதைகள், கல்வி பரிமாற்றம் மற்றும் பொது நிதி நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான பயிற்சி போன்ற தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான முயற்சிகளை அமெரிக்கா இரட்டிப்பாக்கும்.
அமெரிக்க-இலங்கை இருதரப்பு வர்த்தகம் மூலம் ஏற்கனவே 180,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஏற்றுமதி மூலம் இலங்கை பொருளாதாரத்திற்கு பில்லியன்களை பங்களிக்கின்றனர்", எனக் குறிப்பிட்டார்.

