கால்வாயில் வீழ்ந்த கார் : பரிதாபமாக இருவர் பலி
மஹியங்கனை (Mahiyanganaya) - பதுளை வீதியின் 17வது தூண் அருகே பிரதான வீதியில் பயணித்த கார் ஒன்று மகாவலி வியன்னா கால்வாயில் வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (15) காலை 06:50 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹியங்கனை காவல்துறை பயிற்சி பாடசாலை அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் ஒருங்கிணைந்து கால்வாயில் வீழ்ந்த காரை மீட்டனர்.
காரின் உள்ளே இருந்த இருவர்
காரை மீட்டதும், காரின் உள்ளே இரண்டு பேர் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அவர்கள் இருவரும் உடனடியாக நோயாளர் காவுவண்டி மூலம் மஹியங்கனை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் இருவரும் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
காரில் இருந்த இருவரும் மொனராகலை, ஒக்கம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் மஹியங்கனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

