யாழில் வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல் - அதிகாலையில் சம்பவம்
Sri Lanka Police
Jaffna
Crime
By Thulsi
யாழ்ப்பாணம் (Jaffna) - கொழும்புதுறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலுக்கான காரணம்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் சிறைக் காவலாளியின் வீட்டின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

