துபாய் விமான நிலையத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
புதிய இணைப்பு
துபாய் விமான நிலையத்தை இலக்குவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.
இதனால் உலகின் இரண்டாவது பரபரப்பான நகர விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
சில விமானங்கள் பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டதாகவும், ஆனால் விமான நிறுவனத்திடம் உறுதிப்படுத்திய பின்னரே பயணிகள் தங்கள் பயணங்களுக்கு வருமாறு விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
முதலாம் இணைப்பு
துபாய் விமான நிலையத்தில் சற்றுமுன்னர் பாரிய வெடிப்புச்சத்தம் கேட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதல் ஈரானால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
சர்வதேச விமானங்களை கண்காணிக்கும் இணையதளமான Flightradar24-ன் தகவல்படி, “
ஐக்கிய அரபு இராச்சிய இலக்கு
அந்த நேரத்தில் பல விமானங்கள் விமான நிலையத்தின் மேல் வானில் சுற்றி கொண்டிருந்ததாகவும், அவை தரையிறங்குவதற்கு முன் காத்திருக்கும் “holding pattern” நிலையில் இருந்ததாகவும் காணப்பட்டது.
Flights bound for Dubai are holding after a reported drone/missile strike in close proximity to the airport. https://t.co/Xv8JfcamE6 pic.twitter.com/Q41IirIJCV
— Flightradar24 (@flightradar24) March 7, 2026
உலகில் சர்வதேச பயணிகளுக்கான மிகவும் பிஸியான விமான நிலையமான துபாய் விமான நிலையத்தில் இருந்து, தினமும் ஐக்கிய அரபு இராச்சிய இலக்குகளை நோக்கி ட்ரோன் தாக்குதல்கள் நடைபெற்று வந்தபோதிலும், திங்கட்கிழமை முதல் குறைந்த அளவில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.” என்று தெரிவித்துள்ளது.
Dubai Media Office தனது X தளத்தில் வெளியிட்ட பதிவில், “தடுக்கப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு விழுந்த சிதைவுகளால் ஏற்பட்ட சிறிய சம்பவம் மட்டுமே” என தெரிவித்தது.
அதே பதிவில் விமான நிலையம் குறித்து பரவிய சில தகவல்களையும் மறுத்துள்ளது. கடந்த சனிக்கிழமை, துபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட சம்பவத்தில் நான்கு பணியாளர்கள் காயமடைந்ததுடன், ஒரு பயணிகள் பகுதி (concourse) சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |