சர்வதேச ஒப்பந்தங்கள் மீறப்படும் நிலையில் புலம்பெயர் முதலீடுகளுக்கு உத்தரவாதம் யார்

Sri Lanka Tamil diaspora Japan China India
By Kalaimathy Dec 14, 2022 12:17 PM GMT
Report
Courtesy: அ.நிக்ஸன்

தமிழ்த்தரப்பு தமது கோரிக்கையில் நிலையில்லாமலும் பிடிவாதம் இன்றியும், அதேநேரம் அவ்வப்போது சிங்கள ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கியும் செயற்பட்டமையினால், இந்தியா போன்ற நாடுகள் சிங்கள ஆட்சியாளர்களின் பக்கம் நின்று தமிழர் விவகாரத்தைக் கையாளுகின்றன.

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற வல்லரசு நாடுகளுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், வர்த்தகச் செயற்பாடுகள் போன்ற பல திட்டங்களை முன் அறிவித்தல்கள் இன்றி ரத்துச் செய்த சிங்கள ஆட்சியாளர்கள், புலம்பெயர் தமிழர்களுக்கு முதலீடு செய்ய அழைப்பு விடுத்திருக்கின்றனர்.

அரசுக்கு அரசு என்ற அணுகுமுறையில் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப செய்யப்பட்ட ஒப்பந்தங்களைச் சிறிய தீவான இலங்கை ரத்துச் செய்யும் சூழலில், எந்தவிதமான அரசியல் அதிகாரங்கள் - பாதுகாப்புகள் இல்லாத புலம்பெயர் தமிழர்கள் எந்த நம்பிக்கையோடு இலங்கையில் முதலிட முடியும் என்ற கேள்விகள் நியாயமானவை.

பொருளாதார நெருக்கடியில் இருந்து குறைந்த பட்சமேனும் மீள புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை எதிர்பார்க்கும் நிலையிலேயே அதிபர் ரணில் விக்கிரமசிங்க புலம்பெயர் மக்களின் முதலீடுகளை எதிர்பார்க்கிறார் என்பது தெரிகிறது.

தமிழ் உறுப்பினர்களைப் பேச்சுக்கு வருமாறு அழைத்த பின்னணியும், பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வைக் காண வேண்டும் என்ற நோக்கில் அமைந்தமை என்பதும் கண்கூடு. ஆகவே இரண்டு விடயங்களை இங்கே அவதானிக்க வேண்டும்.

ஒன்று, புலம்பெயர் மக்களின் உதவிகளைப் பெறுவது, இரண்டாவது அரசியல் தீர்வுக்கான பேச்சு என்று கூறி, இலங்கையில் நல்லிணக்கச் செயற்பாடுகள் விரிவடைகின்றன என்ற தோற்றப்பாட்டை சர்வதேசத்திற்குக் காண்பிப்பது.

சீனாவிடம் கையளிக்கப்பட்ட கிழக்கு முனையம்

சர்வதேச ஒப்பந்தங்கள் மீறப்படும் நிலையில் புலம்பெயர் முதலீடுகளுக்கு உத்தரவாதம் யார் | America India Japan Tamil Diaspora Sri Lanka Ranil

ஆனால் சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து பெற்ற பட்டறிவு தமிழர்களிடம் உண்டு. அதுவும் புலம்பெயர் தமிழர்களிடம் அந்தப் பட்டறிவு அதிகமாகவே உண்டு என்பதைச் சிங்கள ஆட்சியாளர்கள் நம்ப மறுக்கின்றனர் அல்லது அவர்கள் சார்பான தமிழ் முகவர்கள் உர மூட்டுகின்றனர் எனலாம்.

2015இல் மைத்திரி – ரணில் அரசாங்கத்திலே தான் சில சர்வதேச ஒப்பந்தங்கள் செயலிழந்தன. குறிப்பாக 2016 ஆம் ஆண்டு செய்யப்பட்ட கொழும்புத் துறைமுக கிழக்கு முனைய அபிவிருத்தி ஒப்பந்தம், ஜப்பான் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் இலங்கையுடன் இணைந்து அபிவிருத்தியை மேற்கொள்வதென ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் ஒப்பந்தத்தின் பிரகாரம் சிறிலங்கா அதற்கு அனுமதிக்கவில்லை. மாறாகக் கொழும்புத் துறைமுகக் கிழக்கு முனைய அபிவிருத்தி சீனாவிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது.

இதேபோன்று 2018 இல் அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் அபிவிருத்தி உடன்படிக்கை தன்னிச்சையாகவே ரத்துச் செய்யப்பட்டது. அப்போது அதிபராக இருந்த மைத்திரிபால சிறிசேன மிலேனியம் சவால்கள் நிறுவன தலைவருடன் உரையாடி இணக்கம் தெரிவித்த நிலையிலேயே ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. 

அதேபோன்று இலங்கையின் தலைநகர் கொழும்பில் வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜப்பான் அரசின் கடனுதவித் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இலகு ரயில் சேவைத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் தன்னிச்சையாக ரத்துச் செய்துள்ளது.

திட்டத்தை ரத்துச் செய்வது தொடர்பாக ஜப்பான் அரசுடன் எந்தவிதமான பேச்சுக்களும் நடத்தப்படவில்லை. இலங்கைக் கணக்காய்வாளர் நாயக திணைக்களத்தின் அறிக்கையின் படி செப்டம்பர் 24, 2020 அன்று அங்கீகாரம் பெற்றிருந்த நிலையில் இத்திட்டம் இரத்துச் செய்யப்பட்டிருக்கிறது.

அதேவேளை, பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இந்தியாவும் இலங்கையும் 2006 இல் சம்பூர் மின் உற்பத்தி மற்றும் 2009 இற்குப் பின்னர் வடக்கு, கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டிருந்தன.

ஆனால் இவை உரிய முறையில் செயற்படவில்லை. 2002 இல் கொழும்பில் அமைக்கப்பட்ட இந்தியாவின் அப்பலோ மருத்துவனை, 2006 இல் இலங்கையினால் பறிமுதல் செய்யப்பட்டது.

சர்வதேச விதிகளுக்கு மாறாக இலங்கை வர்த்தகர் ஒருவர் மூலம் வெவ்வேறு பெயர்களில் அதிகளவு பங்குகளைக் கொள்வனவு செய்து அப்பலோ மருத்துவமனையை இலங்கைக்கு உரியதாக்கி லங்கா மருத்துவமனை என்று பெயர் மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்களின் முதலீட்டிற்கு உத்தரவாதம் என்ன? 

சர்வதேச ஒப்பந்தங்கள் மீறப்படும் நிலையில் புலம்பெயர் முதலீடுகளுக்கு உத்தரவாதம் யார் | America India Japan Tamil Diaspora Sri Lanka Ranil

இந்த விவகாரம் தொடர்பாக அப்போது கொழும்பில் இருந்த இந்தியத் தூதுவர் நிருபன் சென், அமைச்சராக இருந்த அமரர் அனுரா பண்டாரநாயக்கவுடன் கடுமையாகத் தர்க்கப்பட்டார். சிறிலங்கா நாடாளுமன்றத்திலும் இந்தியாவுக்கு எதிரான விமர்சனங்களை அனுரா பண்டாரநாயக்க அள்ளி வீசினார்.

சென்னை இராமச்சந்திர மருத்துவமனையைக் கொழும்பில் அமைக்க சந்திரிகா அதிபராக இருந்தபோது 2004 இல் வர்த்தக ஒப்பந்தம் ஒன்று தயாராகியிருந்தது. ஆனால் 2005 இல் மகிந்த ராஜபக்ச அதிபராக பதவியேற்ற பின்னர் அதனை இரத்துச் செய்தார்.

கொழும்பு கொள்பிட்டி காலி வீதியில் இந்திய தூதரகம் அமைப்பதற்கு 2013 இல் இடம் ஒதுக்கிவிட்டுப் பின் அதனை மீளப் பெற்று சீன விமான நிறுவனம் ஒன்றுக்குக் கையளிக்கும் ஒப்பந்தத்தில் மகிந்த கைச்சாத்திட்டார்.

இவ்வாறு பல ஒப்பந்தங்கள் ரத்துச் செய்யப்பட்டும் வேறு சில வெளிநாட்டு வர்த்தக முதலீடுகள் அபகரிக்கப்பட்டும் உள்ள சூழலில், புலம்பெயர் தமிழர்கள் எதனை நம்பி இலங்கையில் முதலீடு செய்ய முடியும்? இலங்கை அரச நிறுவனங்களை அல்லது அரச - தனியார் கூட்டு நிறுவனங்கள் சிலவற்றைப் பொறுப்பேற்றுச் செயற்படுத்த முடியுமா என்ற கேள்விகளும் நியாயமானவை.

உதாரணமாக சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனம் நட்டத்தில் இயங்குவதாகக் கூறியே அதன் பங்குகள் எமிரேட்ஸ் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டிருந்தன. ஆனால் லாபம் ஈட்ட ஆரம்பித்ததும், பின்னர் அந்த நிறுவனத்தை சிறிலங்கா அரசாங்கம் மீளவும் பெற்றுக் கொண்டது.

ஆகவே வல்லாதிக்க நாடுகளின் பிரபல சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் இலங்கையோடு நம்பிக்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களைத் தன்னிச்சனையாக ரத்துச் செய்த சிங்கள ஆட்சியாளர்கள், அதிகாரமே இல்லாத எந்த ஒரு நாடுகளினதும் ஆதரவு இல்லாத சூழலில், புலம்பெயர்ந்த தமிழ் வர்த்தகர்கள் முதலீடு செய்தால், அல்லது சில அரச - தனியார் கூட்டு நிறுவனங்களின் பங்குகளைக் கொள்வனவு செய்து இயக்கினால் அதனை மீண்டும் தட்டிப்பறிக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

ஒற்றையாட்சி கட்டமைப்பை மாற்ற விரும்பாத ஆட்சியாளர்கள்

சர்வதேச ஒப்பந்தங்கள் மீறப்படும் நிலையில் புலம்பெயர் முதலீடுகளுக்கு உத்தரவாதம் யார் | America India Japan Tamil Diaspora Sri Lanka Ranil

வல்லரசு நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் ரத்துச் செய்யப்பட்டமை குறித்து இன்று வரை எந்த ஒரு சிங்கள ஆட்சியாளர்களும் பொறுப்புக்கூறவும் இல்லை. ஆகவே புலம்பெயர் அமைப்புகள் இந்த அநீதிகளைச் சுட்டிக்காட்டியும், எழுபது வருடங்களாகத் தமிழர்கள் ஏமாற்றபட்டமை குறித்தும் பரப்புரை செய்ய வேண்டும்.

அத்துடன் வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசம் என்ற அங்கீகாரத்துடன் சுயாட்சி அதிகாரக் கட்டமைப்பு உருவாக்கப்படாமல், இலங்கையில் எந்த ஒரு முதலீட்டுக்கும் தயார் இல்லை என்ற உறுதியான தகவலை சர்வதேசத்தில் பிரச்சாரப்படுத்தவும் வேண்டும்.

ரணில் விக்ரமசிங்கவோ, சஜித் பிரேமதாசவோ, சிங்கள ஆட்சியாளர்கள் எவருமே இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மாற்ற விரும்பமாட்டார்கள் என்பது எழுபது வருட உண்மை.

முதலீடுகளைச் செய்யுமாறு ரணில் அழைப்பு விடுத்துள்ள நிலையில், உள்ளகப் பொறிமுறைதான் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு என்று பிரதமர் தினேஸ் குணவர்த்தன கொழும்பில் ஏழாம் திகதி புதன்கிழமை செய்தியாளர்களிடம் துணிவுடன் கூறியிருக்கிறார்.

ஆகவே இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பில் மாற்றத்தைச் செய்யாமல், உள்ளக ரீதியான ஒற்றையாட்சிப் பொறிமுறைகள் ஊடே கொழும்பை மையமாகக் கொண்ட அதிகாரப் பரவலாக்கத்தை மாத்திரம் இலங்கை விரும்புகிறது.

அத்துடன் சிங்களவர்கள் விரும்பும் அரசியல் தீர்வின் மூலம் புலம்பெயர் மக்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டுமெனவும் சிங்கள அரசியல் தலைவர்கள் விரும்புகின்றனர், எதிர்பார்க்கின்றனர் என்பதும் இங்கே பகிரங்கமாகியுள்ளது.

ஆகவே தமிழர்களுக்குரிய அரசியல் - பொருளாதார பாதுகாப்பு அற்ற ஒரு சூழலில் துணிவோடு அழைப்பு விடுக்கப்படுகின்றது என்றால், இதன் பின்னால் வல்லாதிக்க நாடுகளின் பங்களிப்பும் இல்லாமல் இல்லை.

ஏனெனில் தம்முடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், அபிவிருத்தித் திட்டங்களுக்கான முன்மொழிவுகள் பலவற்றை மீறியதால் அதற்குப் பதிலாக இலங்கையோடு பேரம் பேசி இலங்கையில் தமக்குரிய வேறு ஏதேனும் லாபங்களை அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற வல்லாதிக்க நாடுகள், அரசுக்கு அரசு என்ற இராஜதந்திர உறவுகளின் மூலம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆகவே அரசற்ற சமூகமாக இருக்கும் புலம்பெயர் தமிழர்களைச் சிங்கள ஆட்சியாளர்கள் கன கச்சிதமாக ஏமாற்றுவார்கள் என்ற நுட்பமான அடிப்படை உண்மை இந்த வல்லாதிக்க நாடுகளுக்குத் தெரியாததல்ல. இலங்கையைத் திருப்திப்படுத்தவே ஈழத்தமிழர் தொடர்பான சிங்கள ஆட்சியாளர்களின் சமீபகால நகர்வுகளை அமைதியாக இந்த வல்லாதிக்க நாடுகள் அவதானித்தக் கொண்டிருக்கின்றன.

குறிப்பாகத் தமது புவிசார் அரசியல், புவிசார் பொருளாதார நோக்கில் செயற்படும் இந்த வல்லாதிக்கச் சக்திகள், இலங்கைத்தீவில் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக நிலவும் இன முரண்பாடுகள் பற்றிக் கவலைப்படுவதேயில்லை.

ஆனால் முடிந்தவரை சிங்கள மக்கள் விரும்பும் அரசியல் தீர்வுக்குத் தமிழர்கள் இணங்கிச் செல்ல வேண்டுமென வற்புறுத்தியும் வருகின்றன. 2002 சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்திலும் இந்த நிலைப்பாட்டோடுதான் குறித்த வல்லாதிக்க நாடுகள் செயற்பட்டுமிருந்தன.

ஆகவே இதற்குச் சரியான பதில் கொடுக்க வேண்டியது புலம்பெயர் தமிழர்கள்தான். குறிப்பாக இலங்கையில் முதலீடு செய்யலாம் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் சில புலம்பெயர் வர்த்தகர்கள், சிங்கள ஆட்சியாளர்களின் நுட்பமான காய் நகா்த்தல்களையும், அது பற்றிய வல்லாதிக்கச் சக்திகளின் கள்ள மௌனத்தையும் ஆழமாக நோக்க வேண்டும்.

தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு மாத்திரமல்ல வடக்குக் கிழக்குச் சிவில் சமூக அமைப்புகளுக்கும் இந்தப் பொறுப்பு உண்டு. வெறுமனே ஆரவாரங்களுக்கும் பரபரப்புப் பேச்சுக்களுக்கும் இடமளித்து ஈழத்தமிழர்களின் சுயமரியாதையை இழக்கும் ஆபத்துக்களில் சிக்கிவிட முடியாது.

புலம்பெயர் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட பின்னணியிலேதான் இலங்கை வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கே முன்னுரிமை என்று ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்திருப்பதாக நம்பகமான உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எட்டாம் திகதி வியாழக்கிழமை இந்திய நாடாளுமன்றத்தில் கூறியிருப்பதையும் அவதானிக்க வேண்டும்.

இந்தியாவை இலங்கை பல சந்தா்ப்பங்களில் இராஜதந்திர ரீதியாகவும், வர்த்தக ஒப்பந்தங்கள் ரத்துச் செய்யப்பட்டதன் ஊடாகவும் அவமானப்படுத்தியிருக்கின்றது என்று தெரிந்தும், "இலங்கைக்கு முக்கியத்துவம்" என்று அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார் என்றால், இந்தியாவுக்கான முக்கியத்துவத்தை இலங்கை கொடுத்திருக்கிறது என்ற பின்புலத்தை அறியலாம்.

ஈழத்தமிழர்களை ஒற்றையாட்சிக்குள் முடக்கவும் புலம்பெயர் மக்களின் முதலீடுகளை உள்ளீர்க்கவும் இந்திய ஆதரவுத் தளத்தை நீட்ட வேண்டுமென ரணில் கருதியிருக்கலாம்.

இந்தியாவும் ஈழத்தமிழர் விவகாரத்தை இலங்கைக்கு எதிரான ஆயுதமாக்கித் தமக்குரிய புவிசார் நலன்களை அடைந்து வருகிறது என்பதும் புதிய விவகாரமல்ல. ஆகவே இக்காரண காரியங்களை ஈழத்தமிழர்கள் மிக நுட்பமாக அறிந்து காய் நகா்த்த வேண்டும்.

குறிப்பாக இந்தியாவைக் கையாளும் பொறிமுறை ஒன்றைக் கட்சி அரசியலுக்கு அப்பால் வகுக்க வேண்டும். வடக்குக் கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம் என்ற கருத்தை அது பிரதிபலிக்கவும் வேண்டும்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் வடக்குக் கிழக்கு, தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசம் என்பதை உறுதிப்படுத்த எடுத்த முயற்சிகள் பற்றி அப்போது கொழும்பில் தூதுவராக இருந்த ஜே.என்.டிக்சிற் ”கொழும்பு அசைமென்ற்” என்ற தனது நூலில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜே.ஆர்.ஜயவர்த்தன எப்படிப் பிடிவாதமாக நின்றார் என்பது பற்றி டிக்சிற் தனது நூலில் விபரிக்கிறார். ஆகவே மேலும் அது பற்றிய ஆழமான உள்ளக விபரங்களைப் பெற வேண்டியது தமிழ்த் தரப்புக்கு அவசியமானது.

இன்றும் கூட அதே பிடிவாதத்துடனேயே சிங்கள ஆட்சியாளர்கள் நகருகின்றனர். ஆனால் தமிழ்த்தரப்பு தமது கோரிக்கையில் நிலையில்லாமலும் பிடிவாதம் இன்றியும், அதேநேரம் அவ்வப்போது சிங்கள ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கியும் செயற்பட்டமையினால், இந்தியா போன்ற நாடுகள் சிங்கள ஆட்சியாளர்களின் பக்கம் நின்று தமிழர் விவகாரத்தைக் கையாளுகின்றன.

2009 மே மாதத்திற்குப் பின்னரான ஈழத்தமிழ் அரசியல் பரப்பு திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட பொறிமுறை ஊடாகச் செயற்படவில்லை. இப் பலவீனங்களை அறிந்தே ரணில் புலம்பெயர் தமிழர்களிடம் முதலீடு செய்ய வருமாறு அழைத்திருக்கிறார் என்பதும் பகிரங்க உண்மை.   

ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London Ontario, Canada

07 Aug, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு

15 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தம்பலகாமம், பெரியகல்லாறு

18 Jul, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-sur-Marne, France, Brou-sur-Chantereine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

17 Aug, 2017
மரண அறிவித்தல்

அனலைதீவு, ஸ்கந்தபுரம், கிளிநொச்சி

15 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பொல்காவலை, வாழைச்சேனை, புன்னாலைக்கட்டுவன், Edmonton, United Kingdom

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், நுவரெலியா

17 Aug, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பாரதிபுரம்

16 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, Toronto, Canada

16 Aug, 2020
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மயிலியதனை, வவுனிக்குளம், Scarborough, Canada, Vaughan, Canada

14 Aug, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Wolverhampton, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, கொழும்பு, நல்லூர், Melbourne, Australia

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இத்தாலி, Italy, Birmingham, United Kingdom

17 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, வவுனியா

16 Aug, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Drancy, France

08 Aug, 2023
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Ilford, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Toronto, Canada

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
42ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

12 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024