எயார் கனடா விமான சேவை ஸ்தம்பிதம்
கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான எயார் கனடா நிறுவனத்தின் விமான போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் சுமார் பத்தாயிரம் விமானப் பணியாளர்கள் இன்று அதிகாலை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதன் காரணமாக அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான சேவை நிறுவனத்திற்கும் பணியாளர்களுக்கும் இடையிலான ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததால் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தம்
இதன் காரணமாக உலகளவில் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு எட்டப்படாத காரணத்தினால் தொடங்கியதாக கனேடிய பொது ஊழியர் தொழிற்சங்கத்தின் (CUPE) பேச்சாளர் ஹக் பவுலியோட், தெரிவித்துள்ளார்.
இதனால் விமான சேவை நிறுவனம் தனது விமானப் போக்குவரத்து சேவைகளை நிறுத்துவதாக அறிவித்தது.
அதே நேரத்தில் எயார் கனடா, பணியாளர்களை விமான நிலையங்களில் இருந்து தடுக்கும் “லாக்அவுட்” உத்தியை அறிவித்தது.
இந்த நிறுத்தம் நாளாந்தம் 130,000 பயணிகளை பாதிக்கும், இதில் 25,000 கனடியர்கள் வெளிநாடுகளில் பாதிக்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
