நல்லூரானை தரிசித்த பாடகர் மனோ
தென்னிந்திய பிரபல பாடகர் மனோ வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இசைநிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக மனோ இலங்கையை வந்தடைந்துள்ளார்.
நேற்றையதினம் (15.08.2025) பலாலி விமான நிலையம் ஊடாக வந்திறங்கிய பாடகருக்கு பலத்த வரவேற்பும் மரியாதையும் வழங்கப்பட்டது.
பாடகர் மனோ
இந்த நிலையில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாடகர் மனோ, சரியான நேரத்தில் வந்து முருகனின் அருளைப் பெற்றேன். மிக்க மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த பெரும் திருவிழா தற்போது இடம்பெற்று வரும் நிலையில் புலம்பெயர் தமிழர்கள் மட்டுமல்லாது தென்னிந்தியாவில் இருந்தும் நல்லூரானை தரிசிக்க பக்தர்கள் வருகை தருகின்றனர்.
மேலும், ஈழ பாடல்களை தொடர்ந்து பாடுவதற்கு ஆர்வமாகவே உள்ளேன் அதற்கான வாயப்புக்கள் கிடைக்கும் போது, பாடுவேன் என பிரபல பாடகர் மனோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
