உலகை உலுக்கிய அமெரிக்க விமான விபத்து : 41 உடல்கள் இதுவரை மீட்பு
அமெரிக்காவில் (United States) நடந்த விமான விபத்தில் இதுவரை 41 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் கடந்த புதன்கிழமை கான்சாஸ் மாகாணத்திலுள்ள Wichita நகரிலிருந்து புறப்பட்ட விமானமொன்று விர்ஜினியாவிலுள்ள ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்துக்கு அருகே இராணுவ ஹெலிகொப்டருடன் மோதி விபத்துக்குள்ளானது.
விமானத்தில் 60 பயணிகள் மற்றும் நான்கு விமான நிலைய பணியாளர்கள் உட்பட 64 பேர் பயணித்த நிலையில் அனைவரும் உயிரிழந்து இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இராணுவ வீரர்
அத்தோடு, ஹெலிகாப்டரில் பயணம் செய்த மூன்று இராணுவ வீரர்களும் இதில் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான அந்த விமானம் Potomac நதியில் விழுந்த நிலையில், உயிரிழந்தவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 41 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில், அதிகாரிகள் விமானத்தின் மீதமுள்ள பயணிகளுக்காக தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |