அதிர்ஷ்ட இலாப பணத்தை பெற வந்த இளைஞருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி
இளைஞருக்கு ஏற்பட்ட இன்ப அதிர்ச்சி
அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் தனக்கு விழுந்த தொகையை வாங்க வந்த இளைஞருக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது சீட்டிழுப்பு நிறுவனம்.
அமெரிக்காவின் வேஜூனியாவைச் சேர்ந்த ஒருவருக்கு அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் வெறும் 600 டொலர்கள் (இலங்கை மதிப்பில்2.14 இலட்சம்) விழுந்ததாக நினைத்து வாங்கிச் செல்ல வந்துள்ளார்.

ஆனால் அவருக்கு அதிர்ஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை மதிப்பில் ரூபா35.7 கோடி) விழுந்ததாக அதிர்ஷ்டஇலாக நிறுவன ஊழியர்கள் தெரிவித்தது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்பார்த்ததை விட அதிக பரிசுத்தொகை
அதிர்ஷ்ட இலாப நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, Jose Flores Velasquez என்ற அந்த இளைஞர் வேலைக்குப் பிறகு, Annadale-ல் உள்ள ஒரு மளிகைக் கடையில் இருந்து 20X the Money scratch-off அதிர்ஷ்ட இலாபச் சீட்டை வாங்கினார்.
Jose அதிர்ஷ்ட இலாப நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு வந்தபோது, அவர் எதிர்பார்த்ததை விட பரிசுத்தொகையின் மதிப்பு அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசாக விழுந்துள்ளதாகவும், அதனை 30 ஆண்டுகளில் முழுமையாக வாங்கிக்கொள்ளலாம் அல்லது ஒரே தொகையாக வரி பிடிப்பிற்கு முன் 759,878 அமெரிக்க டொலர்களை (இலங்கை ரூ. 27 கோடி) ரொக்கமாகப் பெறலாம் என்று அதிர்ஷ்ட இலாப அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் எந்த விருப்பத்தை தேர்ந்தெடுத்தார் எனது தெரிவிக்கப்படவில்லை. அவர் தனது பரிசு அட்டையுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை அதிர்ஷ்ட இலாப நிறுவனம் வெளியிட்டுள்ளது.