உடன் வெளியேறுங்கள்: அமெரிக்க மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பாகிஸ்தான்(pakistan) மீதான இந்தியாவின் (india)தாக்குதலினால் இந்திய, பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. எனவே, இந்தியாவின் ஒபரேஷன் சிந்தூர் நடந்த பகுதிகளைச் சுற்றி இருக்கும் அமெரிக்கர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும்என பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க மக்களை(us citizen) எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அதன் அறிவிப்பில்,
பயணம் செய்ய வேண்டாம்
இந்திய - பாகிஸ்தான் எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம்.
பாகிஸ்தான் பயணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள். இந்திய - பாகிஸ்தான் தாக்குதல் குறித்து நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்" என்று கூறியுள்ளது.
பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள்
இதேபோல், தாக்குதல் நடக்கும் பகுதிகளைவிட்டு அமெரிக்க மக்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அமெரிக்க வெளியுறவுத் துறையும் அறிவுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
