தீவிரம் அடையும் ஜாம்பி போதைப்பொருள் - உலக மருத்துவர்கள் எச்சரிக்கை
அமெரிக்காவில் புதிதாக விற்பனைக்கு வந்துள்ள ஜாம்பி என்ற போதைப்பொருளால் உலகம் முழுவதும் தீவிர பாதிப்புக்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதன் பெயர் டிரான்ஸ் (tranq) அல்லது சைலாசின்(Xylazine) ஆகும். இந்த போதைப் பொருளை பயன்படுத்துவதால் தோல் அழுகுவதோடு, மனிதர்கள் மிருகங்களை போல் நடந்துகொள்கிறார்கள்.
இதனால் இதனை ஜாம்பி போதைப்பொருள் ( Zombie Drug) என அழைக்கப்படுகின்றது. இது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து அமைப்பால் அங்கீரிக்கப்பட்ட மருந்தாகும்.
கொடூர போதைப் பொருள்
இதனை விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கால்நடை மருத்துவமனைகளில் அமெரிக்காவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதனை வைத்து தான் இந்த கொடூர போதைப் பொருள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுகிறது.
இதனை பயன்படுத்தினால் அடுத்த சில நாட்களுக்கு நித்திரை இல்லாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர மன அழுத்தம், கை, கால்களில் மோசமான புண்கள் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.
அதனை அப்படி கவனிக்காமல் விட்டால் தோல் முழுவதும் பாதிப்படைந்து அழுகிவிடுவதாக கூறப்படுகின்றது.
தீவிர பாதிப்பு
A new drug is causing a menace in the United States that has left user’s skin to deteriorate. The ‘zombie drug’ – xylazine, which is used as a veterinarian sedative, is reportedly rotting people’s skin.#zombie #drug #xylazine pic.twitter.com/YE8dSZyAFI
— WION (@WIONews) February 24, 2023
இந்த போதை பொருள் பயன்படுத்தியதும் உச்சகட்ட போதை அடைவதால், அதனை பயன்படுத்துபவர்கள் மிகுந்த உற்சாகம் அடைவார்களாம். அத்தோடு அவர்களுக்கு எங்கு இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் நினைவில் இருக்காதாம்.
இந்நிலையில் ஜாம்பிக்கள் போல வீதிகளில் ஒருசிலர் சுற்றித்திரியும் காணொளிகள் வெளியாகி வருகின்றது. அவர்கள் இந்த போதைப் பொருளை பயன்படுத்தியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களிடமிருந்து இவர்கள் வேறுபட்டு தெரிவதாக கூறப்படுகின்றது.
2021-ம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயோர்க்கில் மட்டும் இந்த போதைப் பொருளை அதிகமாக பயன்படுத்தியதால் 2,668 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாகாண சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி இந்த போதைப் பொருளை அப்படியே தடுக்காமல் விட்டால், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட உலகம் முழுவதும் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என மருத்தவர்கள் எச்சரிக்கின்றனர்.
