முல்லை நகரில் திறந்து வைக்கப்பட்ட மற்றுமொரு அம்மாச்சி உணவகம் (படங்கள்)
தமிழர் தாயகமெங்கும் அம்மாச்சி உணவகம் பாரம்பரிய உணவுகளை வழங்கி வருவதில் பெரும் பங்காற்றி வருகின்றது.
அந்தவகையில் இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் அம்மாச்சி உணவகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
மாவட்டச் செயலகத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பங்குபற்றலுடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இரண்டாவது கிளை
மாவட்ட செயலக பணியாளர்களுக்கும் மாவட்டச் செயலகத்திற்கு வருகை தருகின்ற பொது
மக்களுக்குமான பாரம்பரிய உணவுகளை பெற்றுக்கொள்வதில் இது உதவியாக அமையும் என அரச அதிகாரிகள் கருத்துத் தெரிவித்தனர்
நீண்ட தூரங்களில் இருந்து அரசாங்க அதிபர் அலுவலகத்தில் பயன்பெற வரும் பொதுமக்களுக்கு குறைந்த செலவில் பயனுடைய தமிழ்ப் பண்பாட்டு உணவுகளை பெற்றுக்கொண்டு பசியாற இந்த அம்மாச்சி உணவகம் பெருமளவில் உதவியாக இருக்கும்.
முல்லைத்தீவு நகரத்தில் அம்மாச்சி உணவகத்தின் இரண்டாவது கிளை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.