பெற்றோருடன் கோயிலுக்குச் சென்ற 2 வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்
Sri Lanka Police
Ampara
Hospitals in Sri Lanka
Death
By Kathirpriya
அம்பாறை (Amparai) பிபில பிரதான வீதியில் நாமல் ஓயா பகுதியில் குழந்தையொன்று லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நேற்றிரவு (06) இடம்பெற்ற இந்த விபத்தில் அம்பாறை, நாமல் ஓயா பகுதியைச் சேர்ந்த 02 வயது 07 மாதங்களேயான குழந்தை உயிரிழந்துள்ளது.
ஆலயமொன்றில் குழந்தையுடன் பெற்றோர் சமய நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்த போது, குழந்தை பெற்றோரின் கவனத்தில் இருந்து தப்பி குழந்தை வீதிக்கு வந்தபோது இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இன்றைய செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்