வாகனம் மோதியதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி..!
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
Death
By Kiruththikan
புசல்லாவ, இரட்டைப்பாதை பகுதியில் கண்டி - நுவரெலியா பிரதான வீதியில் வாகனம் மோதியதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இவ்விபத்து இன்று (18.04.2023) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. நுவரெலியாவிலிருந்து கண்டியை நோக்கி பயணித்த வாகனமொன்று இவரை மோதிவிட்டு, தப்பிச்சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
அதிக இரத்தபோக்கு ஏற்பட்டதால் குறித்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அடையாளம் காணப்படவில்லை
சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி