ரஷ்யாவை இறுக்கும் பிரிட்டன்: முக்கிய நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டது தடை
ரஷ்ய எண்ணெய்க் கப்பல்கள் ஆயுத உற்பத்திக்கு முக்கிய பங்களிக்கும் நிறுவனங்கள் மீது பிரிட்டன் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர் தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வந்தாலும், அவற்றை ரஷ்யா கண்டுகொள்வதாகவேயில்லை.
ரஷ்யாவின் எண்ணெய்க் கப்பல்கள் மீது தடை
இந்த நிலையில், ரஷ்யாவின் எண்ணெய்க் கப்பல்கள் மற்றும் ஆயுத உற்பத்திக்கு முக்கிய பங்களிக்கும் நிறுவனங்கள் மீது பிரிட்டன் தடை விதித்து அறிவித்துள்ளது.
ரஷ்யாவில் எண்ணெயை ஏற்றுமதி செய்யப் பயன்படுத்தப்படும் சுமார் 70 கப்பல்களைக் குறிவைத்து, அவற்றின் செயல்பாட்டை முடக்கும்வகையில், அவற்றின் மீது பிரிட்டன் தடை விதித்துள்ளது.
மேற்கத்திய தடையை மீறி, எண்ணெய்யை ஏற்றுமதி செய்யப் பயன்படுத்தப்படும் இந்தக் கப்பல்களின் மீதான தடையானது, ரஷ்யாவின் எண்ணெய் வருவாயைக் குறைக்கும்.
ரஷ்ய பொருளாதாரத்திற்கு முதுகெலும்பு
ஷேடோ ஃப்லீட் (Shadow fleet) என்ற அமைப்பின் ஒரு பகுதியான இந்தக் கப்பல்கள்தான், ரஷ்யாவின் பொருளாதாரத்தில் முக்கிய வருவாயை ஈட்டித் தருகின்றன.
மேலும், ரஷ்யாவில் ஏவுகணை மற்றும் ட்ரோன்களுக்குத் தேவையான எலக்ட்ரோனிக்ஸ் உபகரணங்கள், வேதிபொருள்கள், வெடிபொருள்களை வழங்கி, அந்நாட்டின் ஆயுத உற்பத்திக்கு முக்கிய பங்களிக்கும் 30 நிறுவனங்கள் மீதும் பிரிட்டன் தடை விதித்துள்ளது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
