செவ்வாய் கிரகத்தின் பள்ளத்திற்கு வைக்கப்படவுள்ள இந்திய பெயர்
இந்திய இயற்பியலாளர் தேவேந்திர லாலின் நினைவாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பள்ளத்திற்கு 'லால்' என பெயரிட இந்திய விண்வெளி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இயற்பியலாளர் தேவேந்திர லால் (1929-2012) ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானி ஆவார். அகமதாபாத்தில் இந்திய விண்வெளி நிறுவனத்தை நிறுவிய முன்னோடிகளில் தேவேந்திர லால் என்பவரும் ஒருவர்.
செவ்வாய் கிரகத்தின் தெற்கு அரைக்கோளத்தில்
செவ்வாய் கிரகத்தின் தெற்கு அரைக்கோளத்தில் 69 கிமீ விட்டம் கொண்ட ஒரு பள்ளத்திற்கே இந்த பெயர் பெயரிடப்பட்டது.
மேலும், இரண்டு பள்ளங்கள், இரண்டு வட இந்திய நகரங்கள், 'முஸ்ரான்' மற்றும் 'ஹில்சா' என பெயரிட இந்திய விண்வெளி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
செவ்வாயில் தரையிறங்கப்போகும் மங்கள்யான் 2
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் ரோபோ விண்கலத்தை அனுப்பியுள்ளது.
இந்த விண்கலம் 'மங்கள்யான்' என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்திய விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் வகையில் 'மங்கள்யான் 2'வை வடிவமைத்து வருகின்றனர். மங்கள்யான் 2 செவ்வாயில் தரையிறங்கும் என்றும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |