கனடாவில் கடும் சோகத்தை ஏற்படுத்திய இந்தியரின் மரணம்
கனடாவில் சுற்றுலா சென்ற இந்தியர் ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.
கனடாவில் தேசிய பூங்கா ஒன்றிற்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இந்தியர் ஒருவர் மாயமான நிலையில், தற்போது அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீரில் மூழ்கி பலி

கடந்த சனிக்கிழமை, சச்சின் (Sachin Kadam, 42) என்பவர் தனது நண்பர்களுடன் Elk Island தேசிய பூங்காவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அவரும் மற்றொரு நண்பருமாக நின்றபடி துடுப்புப் போடும் paddle boarding என்ற விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போதே அவர் மாயமானார்.
உயிரற்ற உடல் மீட்பு

பின்னர், திங்கட்கிழமை, அவருடைய உயிரற்ற உடல்தான் கிடைத்துள்ளது. சச்சின் தன் மனைவி மற்றும் மகளுடன் 2014ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து கனடா வந்துள்ளார்.
சச்சினுடைய இழப்பு, அவரது மனைவி, இளவயது மகள் மற்றும் நண்பர்களை கடும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.