இரட்டை கொலை சந்தேக நபர் சிறையில் எடுத்த விபரீத முடிவு
Department of Prisons Sri Lanka
Death
Prisons in Sri Lanka
By Sumithiran
இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் தும்பர சிறைச்சாலையின் வைத்தியசாலை வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பல்லேகல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த திலக் திஸாநாயக்க என்ற 49 வயதுடைய சந்தேக நபரே நேற்று (04) தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உறவினர் இருவரை கொன்ற சந்தேக நபர்
இந்த சந்தேகநபர் 2022 ஆம் ஆண்டு தனது உறவினர்கள் இருவரைக் கொன்ற சம்பவம் தொடர்பில் பல்லேகல தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் பல்லேகல காவல்துறையினரும் சிறைச்சாலை திணைக்களமும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி