தமிழரசு கட்சியில் மீளவும் அனந்தி..! தாயக அரசியல் திரைமறைவில் அதிர்ச்சி சம்பவங்கள்
தமிழ் தேசியக் கட்சிகள் பல பகுதிகளாகப் பிரிந்துள்ளதால் ஒருங்கிணைந்த அரசியல் திசை தாயக மைய அரசியலில் குறைந்துள்ளது.
குறிப்பாக மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பில் நீளும் முரண்பாடுகளை தற்போதைய தமிழ் அரசியல் தரப்புக்கள் வலியுறுத்தி வந்தாலும் இந்த ஒற்றுமையின்மை எதிர்கால தமிழ்தேசிய அரசியலை கேள்விக்குறியாக்கியுள்ளன.
மேலும், காணாமல் ஆக்கப்பட்டோர், காணி உரிமை உள்ளிட்ட நீண்டகால பிரச்சினைகள் இன்னும் தீர்வு பெறவில்லை.
இதற்கு மையப்புள்ளியாக தமிழ் அரசியலுக்குள் புகுந்துள்ள தென்னிலங்கை அரசியலின் தாக்கம் காரணமான இருக்கலாம் எனவும் அரசியல் ஆய்வாளர்களினால் குற்றங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதனால் பொதுமக்களிடையே அரசியல் மீதான ஏமாற்றமும் நிச்சயமற்ற தன்மையும் அதிகரித்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் வடக்கு கிழக்கு அரசியலில் தற்போது வலுத்து வரும் குழப்ப நிலை, மற்றும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படபோகும் குழப்பங்கள் தொடர்பிலும் விளக்கமளிக்கிறார் ஐ.பி.சி தமிழின் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் பொதுச்செயலாளர் அனந்தி சசிதரன்...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |