சற்றுமுன் சீமான் அதிரடியாக கைது : அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் தமிழக அரசின் தொடர் அடாவடி
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, ஆர்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் டிசம்பர் 23 ஆம் திகதியன்று மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாதிக்கப்பட்ட மாணவி டிசம்பர் 23 ஆம் திகதியன்று இரவு உணவுக்குப் பிறகு மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குறித்த மாணவியை அச்சுறுத்தி பிறகு மாணவியின் நண்பரை அங்கிருந்து அடித்து விரட்டிவிட்டு குறித்த பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார்.
அத்தோடு, இந்த விடயத்தை வெளியில் கூறினால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய காணொளியை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என மிரட்டியதால் பாதிக்கப்பட்ட மாணவி பயத்தில் இருந்துள்ளார்.
Anna University female student sexual assault, Seeman and Naam Tamilar party members who came to protest seeking justice arrested!#EnsureWomenSafety
— நீதிமான் (@Neethiman3) December 31, 2024
அற வழியில் போராட்டம் நடத்துவது சர்வதேசக் குற்றமா..?#பாசிச_திமுக_ஒழிக pic.twitter.com/STZVC4DEse
இதையடுத்து, உடன் இருக்கும் மாணவிகள் கேட்கவும் நடந்ததை தெரிவித்த பாதிக்கப்பட்ட மாணவி இதையடுத்து, அவரின் பெற்றோருக்கும் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அடுத்த நாள் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
மாணவி அளித்த புகாரின் பேரில் அந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
காவல்துறை விசாரணை
அதன் அடிப்படையில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபரை பாதிக்கப்பட்ட மாணவி அடையாளம் காட்டியுளள்ளார்.
இதையடுத்து, டிசம்பர் 25 ஆம் திகதியன்று 37 வயதான ஞானசேகரன் என்ற நபர் நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்யும் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரிவித்த மாணவி, குறித்த நபர் சம்பவத்தன்று பல்கழைக்கழகத்தில் தனக்கு தெரிந்தவர் இருப்பதாக தெரிவித்து தொலைபேசியில் ஒருவருடன் உரையாடியதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும், குறித்த நேரத்தில் சந்தேக நபரின் தொலைபேசி இயங்கவில்லை என காவல்துறை விசாரணையில் தெரிவித்த நிலையில் காவல்துறையினர் உண்மைகளை மறைப்பதாக கூறி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
அத்தோடு, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஞானசேகரன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்டதாக கூறப்படும் பழைய புகைப்படம் ஒன்று வைரலாகி வந்தது.
இவ்வாறு குறித்த விடயம் தொடர் சர்ச்சைக்குள்ளாக்கபட்டு வந்த நிலையில், இது போல சம்பவம் இனி நடக்க கூடாது என தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாட்டையடி போராட்டத்தை மேற்கொண்ட விடயமும் பரப்பரப்பாக பேசப்பட்டது.
இவ்வாறான பிண்ணனியில், நேற்றையதினம் (30) தவெக கட்சியின் தலைவர் விஜய் தனது கைப்பட எழுதிய கடித நகலை நேற்றையதினம் (30) காலை வெளியிட்டிருந்தார்.
தொடர் விமர்சனங்கள்
இந்தநிலையில், தவெக நிர்வாக தலைமை கட்சி உறுப்பினர்களுக்கு குறித்த கடித நகலை அனைத்து பெண்களுக்கு விநியோகிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, சென்னையின் பல்வேறு பல்கழைக்கழக நுழைவாயில், பேருந்து நிலையம் மற்றும் பல இடங்களில் பெண்களுக்கு குறித்த கடித நகல் வழங்கப்பட்டு விளிப்புணர்வை ஏற்படுத்தி வந்தனர்.
இந்தநிலையில், டீநகரில் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறித்த கடித நகலை வழங்கிக்கொண்டிருந்த போது அங்கு அவர் உட்பட கட்சி நிருவாகிகள் அணைவரும் கைது செய்யப்பட்டனர்.
முன்னனுமதி இன்றி குறித்த கடித நகல் வழங்கப்பட்டதால் கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்திருக்கும் தவெக கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.
இவ்வாறான பிண்ணனியில் இன்றைய தினம் (31) அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் உட்பட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என அனைவரையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர்.
குறித்த விடயம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் தொடர் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |