யாழ்ப்பாணத்திலும் அன்னை பூபதியின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்
தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரை ஈகம் செய்த தியாகத்தாய் அன்னை பூபதியின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை நல்லூரடியில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்திலும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
நாளை (19) அன்னை ஈகைச் சாவினைத் தழுவிக்கொண்ட நேரமான 8.45 மணி முதல் தியாகத்தாயின் உருவப்படத்திற்கு பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தமுடியும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நினைவேந்தல் நிகழ்வு
அதனைத் தொடர்ந்து இறுதி நினைவேந்தல் நிகழ்வு மாலை 5 மணிக்கு நடைபெறும். இவ் நினைவேந்தலில் ஈகைச்சுடரினை தியாகத்தாய் அன்னை பூபதியின் பேத்தி ஏற்றிவைப்பார்.
இவ் அஞ்சலி நிகழ்வில் அனைவரையும் பங்குபற்றுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.
இதேவேளை, மட்டக்களப்பிலிருக்கும் அன்னை பூபதி நினைவிடத்திலும் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ள பொதுக்கட்டமைப்பு அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
