அன்னை பூபதியின் இறுதி நாள் நினைவஞ்சலி - விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka
Indian Army
By Kalaimathy
இந்திய அமைதிப் படையினருக்கு எதிராக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை தியாகம் செய்த தியாக தீபம் அன்னை பூபதியின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை நினைவு கூரப்படவுள்ளது.
இறுதி நாள் நிகழ்வுகள் நாளை நல்லூரில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய நாளை, அன்னை உயிர்த் தியாகம் செய்த நேரமான 8.45 மணி முதல் உருவப்படத்திற்கு பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி நாள் நினைவஞ்சலி
அதனைத் தொடர்ந்து இறுதி நினைவேந்தல் நிகழ்வு மாலை 5 மணிக்கு நடைபெறும். இந்நினைவேந்தலில் ஈகைச்சுடரினை தியாகத்தாய் அன்னை பூபதியின் பேத்தி ஏற்றிவைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே அன்னை பூபதியின் இறுதி நாள் அஞ்சலி நிகழ்வில் அனைவரையும் பங்குபற்றுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனா என்பதும் குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி